ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தான் இளமையானது: ஆய்வுத் தகவல்

Report Print Kabilan in விஞ்ஞானம்

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தேசிய அறிவியல் அகாடமி ஒன்று மனிதரில் ஆண்-பெண் இருவரின் மூளை தொடர்பான ஆய்வை நடத்தியது. இதில் 20 வயது முதல் 80 வயதுடைய 121 பெண்களும், 84 ஆண்களும் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில் மூளையின் வளர்சிதை மாற்றம் தொடர்பாக, மூளையில் உள்ள குளுகோஸ் மற்றும் காற்றோட்டத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் ஆண்களின் மூளை தங்கள் வயதை விட 2 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை முதியதாகவும், பெண்களின் மூளை தங்களின் வயதை விட 3 ஆண்டுகள் 8 மாதங்கள் இளையதாகவும் இருப்பது தெரிய வந்தது.

இதன்மூலம், ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை இளமையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், இது வயது வேறுபாடின்றி கிடைத்த சமச்சீரான முடிவு எனவும் ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers