அரிய வகை விண்கல் சூரியனுக்கு அண்மையில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சூரியனும், கோள்களும் காணப்படும் பகுதியில் புதிய அரிய வகை விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2019 AQ3 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது சூரியனுக்கும் வெள்ளிக் கிரகத்திற்கும் இடைப்பட்ட தூத்தை விடவும் குறைவான தூரத்தில் சூரியக் குடும்பத்தின் ஒழுக்கில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்கல் ஆனது சூரியனை சுற்றி வருவதற்கு 165 நாட்கள் வரை எடுக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இவ் வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதன் முதலில் அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பல தொலைகாட்டிகளின் உதவியுடன் ஜனவரி 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் மேலதிக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதன் நீளமானது 1.6 கீலோ மீற்றர்கள் வரை இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers