11 அடி உயரமான இராட்சத பறவை பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஐரோப்பிய பகுதியில் சுமார் 11 அடி உயரமான இராட்சத பறவை வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கான படிமம் ஒன்றினை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முதிர்ச்சியடைந்த இந்த பறவையின் எடை 450 கிலோ கிராம்கள் வரை காணப்பட்டிருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது சுமார் அரை டன் அளவு இருந்திருக்கும்.

இதனால் உலகில் வாழ்ந்த மிகப்பெரிய பறவையாக இப் பறவை இருந்திருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் இதன் வடிவம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான படம் ஒன்றினையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளதுடன், இது ஒரு பறக்க முடியாக பறவையாக பூமியில் வாழ்ந்திருக்கும் எனவும் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்