மார்பக புற்றுநோய் கலங்களில் பரவுவதை தடுக்க புதிய முயற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உடலில் உள்ள சில கலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவை ஏனைய கலங்களுக்கும் பரவும் ஆபத்து காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

மார்பக புற்றுநோயும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

எனினும் இவ்வாறு ஏனைய கலங்களுக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது புற்றுநோய் பாதிக்கப்பட்ட கலங்களை கொழுப்புக் கலங்களாக (Fat Cells) மாற்றுவதன் மூலம் ஏனைய கலங்களுக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும்.

இம் முயற்சியானது எலிகளில் தற்போது சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையானது வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே Epithelial-Mesenchymal Transition (EMT) எனும் குறித்த தொழில்நுட்பத்தின் மூலம் மார்புப் புற்றுநோயையும் குணப்படுத்த முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்