பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்; 72 பேர் பலி

Report Print Thayalan Thayalan in தெற்காசியா
141Shares
141Shares
ibctamil.com

பாகிஸ்தானின் சூஃபி வணக்கஸ்தலம் ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 150க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

வணக்கஸ்தலத்தின் பெண்கள் பிரிவை இலக்குவைத்து நடத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உட்படப் பெண்களே பெருமளவில் பலியாகினர். ஐ.எஸ். அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக பாகிஸ்தான் அரசு கூறிவரும் நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments