உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய குடும்பம்: உலகப் பிரபலம் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Fathima Fathima in தெற்காசியா
154Shares
154Shares
lankasrimarket.com

26 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரை காப்பாற்றிய குடும்பத்தினருக்காக உலகப்புகழ் பெற்ற சமையல் கலைஞர் விகாஸ் கன்னா நோன்பு இருந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த விகாஸ் கன்னா, உலகப் புகழ்பெற்ற சமையல் கலைஞர் ஆவார்.

இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

அதில், 26 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் உள்ள ஹொட்டலில் பணியாற்றிய போது கலவரம் ஏற்பட்டது.

ஹொட்டலை விட்டு யாரும் வெளியேற முடியவில்லை, சில நாட்களில் கலவரம் சரியானதும் எனது சகோதரை பார்க்க சென்றேன்.

அப்போது கலவர கும்பல் பல இடங்களில் இருந்தது, என்னை பார்த்த இஸ்லாமிய குடும்பமொன்று தங்களது மகன் என கூறி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இரண்டு நாட்கள் என்னை பத்திரமாக பாதுகாத்து எனது சகோதரரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் ஒருநாள் நோன்பிருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை என பதிவிட்ட நிலையில், தற்போது அவர்களது குடும்பத்துடன் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்