லண்டனில் கூட சொத்து வாங்கலாம்.. பதிலடி கொடுக்கவே இம்முடிவு! மிரளவைத்த தமிழரின் செயல்

Report Print Raju Raju in தெற்காசியா

ஜம்மு - காஷ்மீரில் சொத்து வாங்க அனுமதி கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி அசத்தியுள்ளார்.

வழக்கறிஞர் முத்துக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், அண்மையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது.

மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நான் ஒரு பாஜக தொண்டன். ஒரு தொண்டனாக சட்டப்பிரிவு 370 ரத்தை நான் மகிழ்ந்து கொண்டாடுகிறேன்.

சட்டப்பிரிவு 370 ரத்து மற்ற மாநிலத்தவரும் அங்கு நிலம் வாங்க வழிவகை செய்துள்ள நிலையில் நான் காஷ்மீரில் எந்த நிபந்தனையுமின்றி குடியேற விரும்புகிறேன்.

அதற்காக காஷ்மீரில் எனக்குச் சொந்தமாக நிலம் வாங்க விரும்புகிறேன். அதன்மூலம் தென் பகுதியிலிருந்து காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் பாஜக உறுப்பினர் என்ற பெருமையைப் பெற விரும்புகிறேன்.

எனது கோரிக்கையைப் பரிசீலித்து ஆவன செய்வீர்கள் என நான் நம்புகிறேன்

இது தொடர்பாக முத்துக்குமார் அளித்த பேட்டியில், லண்டன், அமெரிக்காவில்கூட ஒரு இந்தியர் சொத்து வாங்க முடிந்த நிலையில் நம் நாட்டிலுள்ள காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது என்றிருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. அதனால் அங்கு சொத்து வாங்கும் ஆவல் எழுந்துள்ளது.

பாஜகவின் இமாலய சாதனையை சிலர் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்குச் சாதகமான முடிவு என விமர்சிக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்