வீட்டில் ஆமை புகுந்தால் கெட்ட சகுனமா? உண்மை இதுதான்

Report Print Printha in ஆன்மீகம்

ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. இது ஒரு சாதுவான பிராணி. பலரும் ஆமையை வீட்டில் செல்லப் பிராணியாகவும் வளர்த்து வருகிறார்கள்.

ஆனால் அந்த ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கெட்ட சகுனமாகவும் சிலர் நினைப்பது உண்டு. ஏன் தெரியுமா?

ஆமை புகுந்தால் கெட்ட சகுனம் ஏன்?

ஆமை புகுந்த வீடு உருப்படாது. அது ஒரு கெட்ட சகுனம் என்று பலரும் சொல்வார்கள்.

ஆனால் அவ்வாறு கூறுவதன் உண்மை என்னவெனில், ஆமை மிக மெதுவாக நடந்து செல்லக் கூடியது. அந்த ஆமை வீட்டுக்குள் நுழைவது கூடத் தெரியாமல் இருந்தால், அந்த வீட்டில் அந்நியர்கள் கூட நுழைந்து விடலாம்.

அதனால் தான் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகின்றனர். மற்றபடி ஆமைக்கும் கெட்ட சகுனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்