இந்த மலையில் தான் ஆஞ்சநேயர் வாழ்கிறாராம்!

Report Print Kabilan in ஆன்மீகம்

ராமரின் பக்தராகவும், கடவுளாகவும் அறியப்படும் ஆஞ்சநேயர், பாம்பன் தீவில் உள்ள கண்டமதனா மலையில் தற்போதும் வாழ்வதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது ராமேஸ்வரம், இதன் அருகில் அமைந்துள்ள பாம்பன் தீவில், கண்டமதனா என்னும் மலை உள்ளது.

இங்கு தான் ஆஞ்சநேயர் அடிக்கடி வந்து செல்வதாகவும், குடிகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மலை ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கண்டமதனா மலையின் உச்சியில் இருந்து தான் ஆஞ்சநேயர், ராவணன் ஆட்சி செய்த இலங்கையைப் பகுதியை நோட்டமிட்டுள்ளார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இந்த மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு ராம் சரூர்க்கா கோயில் என்று பெயர். இந்த கோயில் மலைப்பகுதியில் உள்ளதால், 3 கிலோ மீட்டர் தொலைவை நடந்தே அடைந்து விடலாம்.

இந்த கோயிலுக்கு அருகே, ராமர் பாதம் என்னும் இடம் உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இந்த கோயிலுக்கு செல்லும் வழியில், எண்ணற்ற தீர்த்தங்களும், கோயில்களும் உள்ளன.

அவற்றில் முக்கியமானவை இரட்டைப் பிள்ளையார் கோயில், சுக்ரீவர் தீர்த்தம், அம்மன் கோயில், அங்கதன் தீர்த்தம், ஜாம்பவான் தீர்த்தம், ஷாக்சி ஹனுமான் கோயில் என்பவை ஆகும்.

மேலும் ராம தீர்த்தம், பீம தீர்த்தம், அர்ஜூன் தீர்த்தம், கண்டமதன தீர்த்தம், தர்மா தீர்த்தம், வீர தீர்த்தம், கிருஷ்ணா தீர்த்தம், பஞ்ச தீர்த்தம், நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், பரசுராம தீர்த்தம், குமுதா தீர்த்தம் ஆகியவையும் உள்ளன.

ராமேஸ்வரத்திற்கு செல்பவர்கள் பெரும்பாலும், கண்டமதனா மலைக்கு சென்று வருவார்கள். இந்த மலையில், சூரிய உதயம் மற்றும் மறைவு காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

மேலும், ராமேஸ்வரத்தை முழுமையாக காண நினைப்பவர்கள், கண்டமதனாவிற்கு அருகே உள்ள சுக்ரீவர் தீர்த்தத்தின் மீது ஏறி காணலாம்.

ராம தீர்த்தத்திற்கு அருகில் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலைச் சுற்றி எண்ணற்ற உணவகங்கள், விடுதிகள், கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்