பழனியில் ஆண்டிக்கோலம் ஏன்?

Report Print Kavitha in ஆன்மீகம்

இந்து சமயத்தில் இரண்டு விதமாகவும் காட்சியளிப்பது முருகன் மட்டுமே அதற்கான நல்லறிவை தரும் ஞானபண்டிதனாக, முருகன் பழநியில் ஆண்டிக்கோலம் அருள்பாலிக்கிறார்.

முருகனின் கோலங்களில் அறிவு மயமான வடிவம் ஆண்டிக்கோலம். இவ்வடிவத்தை வணங்கினால் நமக்கும் நல்லறிவு கிடைக்கும். இறைவனின் வடிவங்கள் எல்லாமே மங்களகரமாக அமையும் என்பது நம்பிக்கை ஆகும்.

அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானவர் என்று தலபுராணம் கூறுகிறது.

ஆனால், தத்துவரீதியாக இவ்விஷயம் இப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல், நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

தைப்பூச நன்னாளில் தண்டாயுத பாணியை இக்கோலத்தில் வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது ஜதிகம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்