நாகதோக்ஷம் உள்ளவர்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய பரிகாரம்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

ராகு- கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுவதனால் ஏற்படும் விளைவுகளையே ஜோதிடர்கள் நாக தோஷம் என்கின்றார்கள்.

இவ்வறு நாகதோக்ஷம் உள்ளவர்கள் ஆலயங்களிற்கு சென்று பல்வேறு பரிகாரங்களை செய்கின்றார்கள். ஆலயங்களிற்கு செல்லமுடியாதவர்கள் வீட்டில் இருந்தே இந்த பரிகாரத்தினை செய்யமுடியும் எனவும் கூறுகின்றார்கள்.

அதனை எவ்வாறு வீட்டில் செய்யலாம் என பார்க்கலாம்,

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது என்பதோடு ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது என்கின்றார்கள்.

ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது. சுவற்றிலோ அட்டையிலோ வேறு பொருளின் மீதோ நாகத்தை வரையலாம்.

அரிசி மாவில் தண்ணீர் விட்டுக்கரைத்து, ஏழு பாம்புகள் வரைய வேண்டும். மேலே தலை கீழே வால் இருக்குமாறு படத்தை வரைய வேண்டும். பூஜை செய்பவர்களின் கைக்கு ஒரு முழு அளவில் கிழக்கு முகமாக வரைய வேண்டும்.

வடக்கு முகமாக அமர்ந்து, பூஜையை பெண்களோ அல்லது ஆண்களோ அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டி அன்று செய்ய வேண்டும்.

நிவேதன பொருளாக தேங்காய் பழம் வைக்கலாம்.

புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கஞ்சிவடிக்காத சாதத்தை நிவேதனம் செய்து உப்பில்லாமல் சாப்பிடலாம். இரவில் பால் பழம் சாப்பிடுவது நல்லது.

பெண்கள் ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டியன்று பாம்பையும், அது குடியிருக்கும் புற்றை யும் வழிபட வேண்டும்.

தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றில் ஏதாவது ஒரு உலோகத்தில் நாக உருவத்தை செய்து அவ்வடிவத்தை பூஜை அறையில் வைத்து சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜை நாள் அன்று உபவாசம் இருப்பது நல்லது. மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி அதன் பின்னர் உணவருந்தி உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் உடல் நலம், மனநலம், குடும்ப நலம், மகப்பேறு ஆகியவை உண்டாகும். நாகதோஷமும் நீங்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers