நவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய பூஜை முறைகள்

Report Print Jayapradha in ஆன்மீகம்

இந்த வருடம் நவராத்திரி பண்டிகை அக்டோபர் 9ஆம் தேதி துவங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நவராத்திரி பண்டிகையை கொண்டாட கலசம் வைத்து அதில் தேவியை எழுந்தருள வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானது.

மேலும் நவராத்திரியின் ஒன்பது நாட்கள் சில விஷயங்களை கடைபிடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
 • முதல் நாள் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து, தோடி ராகப்பாடல்களை பாடலாம்.
 • இரண்டாம் நாள் முல்லை துளசியால் அலங்காரம் செய்து, புளியோதரை நிவேதனம் செய்யலாம்.
 • மூன்றாம் நாள் செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.
 • நான்காம் நாள் மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.
 • ஐந்தாம் நாள் முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதம் படைத்து வணங்கலாம்.
 • ஆறாம் நாள் அன்று ஜாதி மலரை வைத்து பூஜை செய்யலாம்.
 • ஏழாம் நாள் தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்யலாம்.
 • எட்டாம் நாளில் இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி வழிபாடு செய்யலாம்.
 • ஒன்பதாம் நாள் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம்.
பலன்கள்
 • நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
 • நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
 • நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
 • நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
 • நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்