இலங்கையின் மோசமான நிலைக்கு இது தான் காரணம்.. உடனே இதை செய்ய வேண்டும்: சிறிசேன திட்டம்

Report Print Basu in இலங்கை

இலங்கையை மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்ப அந்நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது திட்டம் ஒன்றை கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆம் திருத்தங்களை நீக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 18வது திருத்தம் சர்வாதிகாரத்தையும், 19வது திருத்தம் நிலையற்ற அரசாங்கத்தையும் உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு திருத்தங்களையும் நீக்கினால் மாத்திரமே மக்கள் ஆணையை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

19வது திருத்தம் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால், கடந்த 4 ஆண்டில் இன்னும் வெற்றிகரமான அரசாங்கத்தை நடத்தியிருக்க முடியும். எனவே நாம் தவறு செய்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எனவே எதிர்காலத்தில் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால், அது ஆட்சியாளர்களின் குறைபாடல்ல. அரசியலமைப்பில் சிக்கல் உள்ளது. கடந்த 4 வருட முறையற்ற அரசியல் நிர்வாகத்திற்கு 19வது திருத்தமே மூல காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்