பேருந்து, ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு: வருகிறது புதிய சட்டம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் பேருந்து மற்றும் ரயில்கள் தாமதமாக சென்றடைந்தால் அதற்கான இழப்பீட்டு தொகையை பயணிகளுக்கு வழங்கும் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் பேருந்து மற்றும் ரயில்களில் மேற்கொள்ளப்படும் பயனங்கள் தொடர்பாக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றடைந்தால் பயணச்சீட்டு விலையில் 25 சதவிகிதம் இழப்பீடாக வழங்கப்படும்.

மேலும், காலதாமதம் இரண்டு மணிக்கு கூடுதலாக ஏற்பட்டால், பயணிகளுக்கு 50 சதவிகிதம் இழப்பீடு வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசிடம் இத்திட்டம் குறித்து அறிக்கை அளித்துள்ளதாகவும், இதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டால் இது உடனடியாக அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments