சுவிட்சர்லாந்தில் இறுக்கமடைந்த குடியுரிமை சட்டம்: மக்கள் செய்தது என்ன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 2018 முதல் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்ற தகவல் கேட்டதும் அதற்குமுன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது தெரியவந்துள்ளது.

ஜெனிவாவில் வாழும் சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று சென்ற ஆண்டு உயர்ந்தது.

2016ஆம் ஆண்டு 3,906 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2017இல் ஒரேயடியாக 5,789 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் மட்டுமே 1,700 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்து முழுவதிலும் கணக்கிட்டால் 2014 இல் 35,034 ஆக இருந்த எண்ணிக்கை 2017இல் 45,901 ஆக உயர்ந்துள்ளது. இது 24 சதவிகித உயர்வாகும்.

ஆனால், புதிய ஆண்டு தொடங்கியபின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

  • இனி சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு C residence permit இருக்க வேண்டும்.
  • அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து 5 அல்லது 10 ஆண்டுகள் அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
  • மொழி எழுத்துத் தேர்வு உட்பட பல நுழைவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதனால்தான் 2018க்கு முன்பே ஏராளமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர் என்று The Geneva population service தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers