தனிப்பட்ட வாழ்வில் நுழைந்தால் டிரோன்களை சுட்டு வீழ்த்தலாம்: சுவிஸ் சட்ட வல்லுநர்கள்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
151Shares
151Shares
lankasrimarket.com

ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் டிரோன் குறுக்கிட்டால் அதனை சுட்டு வீழ்த்தலாம், அதற்காக இழப்பீடு வழங்க தேவையில்லை என சுவிட்சர்லாந்து சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரோன் என்பது சிறிய வகை கண்காணிப்பு வானூர்தி ஆகும். இதனைப் பயன்படுத்தி எளிதாக உளவு பார்க்கலாம். சுவிஸில், தனிப்பட்ட நபரின் பொழுதுபோக்கிற்காகவும், வான்வழி வீடியோக்களை பதிவு செய்யவும் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் தனிப்பட்ட நபரை கண்காணிக்கவோ, அங்கீகரிக்கப்படாத புகைப்படங்களை எடுக்கவோ கூடாது என சட்ட வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் டிரோன் நுழைந்தால், அதனை சுட்டு வீழ்த்தலாம் என்ற கருத்து நிலவுகிறது. தனியார் துப்பறிவாளர் வேவு பார்ப்பதற்காக டிரோனை பயன்படுத்தலாம்.

ஆனால், அதன் மூலம் காண்காணிக்கப்படுவர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவது போன்று தோன்றினால், டிரோன் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும், அதற்காக டிரோன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை எனவும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்