சுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானம் குடிக்கலாம்: மது ஆணைக்குழு

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
165Shares
165Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஆண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானத்தையும் பெண்கள் ஒரு கிளாஸ் மதுபானத்தையும் குடிக்கலாம் என சுவிஸ் மது ஆணைக்குழுவின் புதிய பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மதுபானங்களைத் தவிர்த்து உணவகங்களில் வழங்கப்படும் ஒரு கிளாஸ் அளவு பரிமானத்திற்கு இணங்க இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரோக்கியமான ஆண் ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு கிளாஸ் மதுபானத்தையும் பெண் ஒருவர் ஒரு கிளாஸ் மதுபானத்தையும் தங்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு குடிக்கலாம் எனவும் ஆனால் வாரத்திற்கு ஒருநாள் மது அருந்தாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பீயர், வைன் மற்றும் மதுசாரயம் உள்ளிட்ட மதுபானங்களுக்கு மட்டுமே ஆணைக்குழுவின் இந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக மதுபானங்களை அருந்துவதால் உடல் ரீதியாக ஏற்படும்; அபாயங்கள் விபத்துக்கள் மற்றும் எதிர் விளைவுகள் தொடர்பாகவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து வாலிஸ் மாகாணத்தில் உள்ள முதியவர்கள் மது அருந்தும் விகிதம் 1992 ஆம் ஆண்டு முதல் குறைந்து வருவதாகவும் இந்த நிலை சமீப காலத்திய ஆண்டுகளில் நிலையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்