சுவிஸில் முதல் முறையாக நடந்த ஒப்பந்த முறை திருமணம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
343Shares
343Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் ஜோடி ஒன்று 'Block Chain' எனும் ஒப்பந்த முறை திருமணத்தை செய்துள்ளது.

சுவிஸின் Vaud பகுதியைச் சேர்ந்த ஜோடி ஒன்று, Blockchain முறையில் திருமணம் செய்துள்ளது. இந்த முறையில் சுவிட்சர்லாந்தில் திருமணம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

இது ஒரு ஒப்பந்தம் சார்ந்த திருமண முறையாகும். அதாவது, ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில் இந்த திருமணத்தின் ஒப்பந்தம் பதிவு செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தை இடையில் மாற்றியமைக்க முடியாது.

இந்த தொழில்நுட்ப முறை திருமணம் சான்றிதழ்களின் தேவையை குறைப்பதுடன், ஏமாற்று வேலையை செய்வதற்கான அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், நம்பிக்கைக்குரிய அதிகாரிகளின் தேவை மற்றும் மூன்றாம் நபரின் தேவையும் இந்த முறையானது நீக்குகிறது.

இந்த திருமணத்தில் தம்பதியருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை. ஏனெனில், இது வாழ்க்கைக்கானது அல்ல. அத்துடன் இந்த திருமண ஒப்பந்ததை 42 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், இது ஒரு நிரந்தரமான ஒப்பந்தம் கிடையாது. தற்போது இந்த முறையில் திருமணம் செய்துகொண்ட தம்பதியர், 70 சாட்சியங்களை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்