சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான விமானங்கள்: 23 பேர் பலியானதாக வெளியான தகவல்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
220Shares
220Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில், 23 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதி சுமார் 8,000 அடி உயரம் கொண்டதாகும். இந்த மலைப்பகுதிகளில் பல விபத்துகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சுவிஸின் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று 17 பயணிகள் மற்றும் 2 விமானிகளுடன், ஆல்ப்ஸ் மலைப்பகுதி மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணம் செய்த குட்டி விமானம் ஒன்று, எந்திர கோளாறு ஏற்பட்டு ஆல்ப்ஸ் காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 4 பேரும் பலியாகியுள்ளனர்.

தற்போது இந்த இரண்டு விபத்துகள் தொடர்பாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், விபத்துகள் காரணமாக ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Tage Anzeiger

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்