சுவிஸ்ஸில் நோயாளிகளால் தாக்கப்படும் மருத்துவமனை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் மற்றும் சூரிச்சில் உள்ள பலகலைக்கழக மருத்துவமனைகளில் நோயாளிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும்,

ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போதிய பாதுகாப்பு வழங்க கோரியும் நிர்வாகத்தினரை மருத்துவ ஊழியர்கள் அணுகியுள்ளனர்.

வார்த்தைகளாலும் செய்கையாலும் அவமானப்படுத்துவது மட்டுமின்றி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குவதும், கொலை மிரட்டல் விடுத்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செவிலியர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகமும் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்ற விவகாரம் தொடர்பில் எந்த விசாரணையும் முன்னெடுக்காத நிலையில் தற்போது இச்சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெர்ன் அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு எதிராக 83 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களின் சராசரி வயது 33 எனவும் தெரிவித்துள்ளனர்.

போதை மருந்து அல்லது மதுவுக்கு அடிமையான நபர்களே பெரும்பாலும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் புலம்பெயர்ந்த நோயாளிகளே மிகவும் ஆக்ரோஷமாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் பெரும்பாலும் தாக்குதல்களுக்கு உள்ளாவது நர்ஸ்களே என கூறும் ஆய்வாளர்கள்,

போதிய பாதுகாப்பு வசதிகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்