பட்டப்பகலில் சுவிட்சர்லாந்தை நடுக்கிய சம்பவம்: பொலிஸில் சரணடைந்த பெண்மணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதியில் 7 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 75 வயது பெண்மணி ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பாஸல் நகரின் St Galler-Ring பகுதியில் பட்டப்பகலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுவன் பாடசாலையில் இருந்து தனியாக குடியிருப்புக்கு திரும்பியுள்ளான்.

இந்த நிலையில் St Galler-Ring பகுதியில் வைத்து திடீரென்று சிறுவன் தாக்கப்பட்டுள்ளான்.

கழுத்தில் படுகாயத்துடன் குற்றுயிராக கிடந்த சிறுவனை அந்த வழியாக கடந்து சென்ற ஆசிரியர் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்து சிறுவன் மரணமடைந்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாஸல் நகர பொலிசார், குற்றவாளி தொடர்பில் தீவிரமாக தேடியுள்ளனர்.

இந்த நிலையில் 75 வயது மதிக்கத்தக்க சுவிஸ் பெண்மணி ஒருவர் தாமே முன்வந்து, அந்த சிறுவனை தாக்கியதாக கூறி சரணடைந்துள்ளார்.

மரணமடைந்த சிறுவன் கொசோவோ அல்பேனியன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. கைதான பெண்மணியிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்