கர்ப்பிணி மனைவியை அடிவயிற்றில் எட்டி உதைத்த கணவன்... உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்பு: சுவிஸில் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இத்தாலிய இளைஞன் தமது மூன்று மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கியதில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

23 வயதான அந்த இளைஞர் தற்போது விசாரணை கைதியாக உள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குறித்த கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன், தமது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அடிவடிற்றில் 10 முறை குத்துவிட்டதாகவும், இதில் கடுமையான வலி, பெண்னுறுப்பில் இருந்து ரத்தம் கசிதல் என உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அந்த துன்புறுத்தலின் விளைவாக அவருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த காலகட்டத்தில், தமது மனைவியை தாக்கியதை ஆதரித்து அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

மேலும், தமது மனைவி கர்ப்பமாக இருந்தார் என கூறுவது பொய் எனவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த வெள்ளியன்று அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், 3 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறை தண்டனையும், 1200 பிராங்குகள் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers