சுவிட்சர்லாந்துக்கு ஒரே நேரத்தில் வருகை தரும் 12,000 சுற்றுலா பயணிகள்: வெளியான சுவாரஸ்ய ஒப்பீடு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் ஒரே நேரத்தில் 12,000 சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் செயல்படும் அமெரிக்க ஒப்பனை நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்ததன் பேரில் எதிர்வரும் திங்களன்று சீனாவில் இருந்து 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர்.

இவர்களுக்காக 95 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதே கிழமையில் லூசெர்ன் நகருக்கு சுற்றுலாவுக்காக மேலும் 8,000 சீனா சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற ஒரு பயணிகள் குழுவை சுவிட்சர்லாந்து வரலாற்றில் இதுவரை எந்த நகரமும் எதிர்கொண்டதில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பில் நிபுணர்கள் குழு சுவாரஸ்ய ஒப்பீடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளது.

பொதுவாக வாடகை டாக்ஸி ஒன்று 14 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 4,000 சுற்றுலா பயணிகளும் நிகழ்ச்சிக்காக ஒன்றாக செல்ல இருப்பதால் அவர்கள் பயணிக்கும் 95 டாக்ஸிகளும் சுமார் 1.33 கிலோ மீற்றர் நீளத்தில் சாலையை ஆக்கிரமிக்கலாம் என கூறப்படுகிறது.

உள்ளூரில் லூசெர்ன் கால்பந்து அணி விளையாடியபோது சுமார் 8,064 பார்வையாளர்கள் மட்டுமே அரங்கத்தில் இருந்து பார்வையாளராக கண்டுகளித்துள்ளனர்.

பொதுவாக SBB ரயிலில் 848 பயணிகள் மட்டுமே ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் சீன சுற்றுலா பயணிகளுக்காக 14 ரயில்கள் ஒரே நேரத்தில் தேவைப்படும்.

ஆசியாவில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணி ஒருவர் லூசெர்ன் நகரில் நாள் ஒன்றுக்கு 325 முதல் 350 பிராங்குகள் வரை செலவிடுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

எனில், 12,000 சுற்றுலா பயணிகளும் சுமார் 4.2 மில்லியன் பிராங்குகள் வரை ஒரே நாளில் செலவிடலாம் எனவும் இது லூசெர்ன் நகர பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் செயல் எனவும் கூறப்படுகிறது.

லூசெர்ன் நகரில் சுற்றுலாவுக்கு பின்னர் தாயகம் திரும்பும் 12,000 சுற்றுலா பயணிகளுக்காக, 300 பேர் பயணிக்க கூடிய 40 விமானங்கள் தேவைப்படும் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்