துர்க்கை அம்மன் ஆலயத்தில் சுவிஸ்நாட்டு மக்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சுவிஸ் நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவர்கள் வருகை தந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் லுட்சேர்ன் மாநிலத்தில் றூத் என்னும் கிராமத்தில் கடந்த 18 ஆண்டுகளாக வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டு இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு, துர்க்கை அம்மன் ஆலயத்தின் இளைஞர்களின் முயற்சியில், அகதிகள் தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை சுவிஸ் நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவர்கள் வந்திருந்தார்கள்.

அதில் றூத் கிராமத்தலைவரும், லுட்சேர்ன் மாநில சமயங்களுக்கு பொறுப்பானவர், பல மத தலைவர்கள் என 80 பேருக்கு மேற்பட்டோர் வந்து எமது சமயம் சம்பந்தமாகவும், ஆலயத்தின் வளர்ச்சி செயற்பாடுகள் சம்பந்தமாகவும் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

றூத் கிராமத்தலைவருக்கு ஆலய பரிபாலனசபை தலைவர் திரு நா. யோகராஜா அவர்கள் பூமாலை அணிந்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கினை வந்திருந்த பலமததலைவர்களும் ஆலய குரு நகுலேஸ்வரக்குருக்களும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இளைஞர்களான விதுஷன், கரிஷ் ஆகியோர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து அவர்களை ஆலய பெண் தொண்டர்கள் வீபூதி சந்தனம் கொடுத்து வரவேற்றார்கள்.

தொடர்ந்து பஜனை, பூசை மற்றும் எமது சைவ உணவையும் அவர்களுக்கு பரிமாறி அவர்கள் ருசித்து ருசித்து உணவு உண்டு அதை பற்றிய விளக்கங்களையும் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

தொடர்ந்து யோகா பற்றிய விளக்கத்தையும் செயல்முறையையும் லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் யோகா வகுப்பு நடாத்தும் திரு ஜீவா அவர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்