மாணவிகள் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமெரா: தொடரும் அத்துமீறல்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் கமெராக்களை மறைத்து வைப்பது சர்வதேச பிரச்னையாகிவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் சுவிஸ் பள்ளி ஒன்றின் கழிவறையில் மாணவி ஒருத்தி, கமெரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்திருக்கிறாள். சூரிச்சிலுள்ள வயது வந்த மாணவிகளுக்கான பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தான் கண்டெடுத்த கமெராவை உடனடியாக அவள் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைக்க, தலைமையாசிரியர் பொலிசாரை அழைத்துள்ளார்.

Bild: Screenshot Telezüri

கமெராவைக் கைப்பற்றியுள்ள பொலிசார் முதலில் அதை ஆய்வு செய்த பின், அதிலுள்ள சிப்பை (Chip)நிபுணர்களிடம் ஆய்வுக்காக கொடுக்க உள்ளனர்.

பள்ளி முழுவதும் சோதனையிடப்பட்ட நிலையில், அந்த ஒரு கமெரா தவிர வேறெங்கும் கமெராக்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bild: Screenshot Telezüri

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்