சீனா- வுஹானில் இருந்து நாடு திரும்பும் சுவிஸ் குடிமக்கள்: ஏற்பாடுகள் தீவிரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா கிருமியால் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வுஹான் நகரில் இருந்து சுவிஸ் குடிமக்கள் 10 பேர் சிறப்பு விமானத்தில் பிரான்ஸ் வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களுடன் அவர்களது சீனத்து குடும்பமும் இந்த விமானத்தில் வந்து சேர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் Marseille பகுதி அருகே இவர்களின் விமானம் தரை இறங்கியுள்ளது.

பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால், பிரெஞ்சு, பெல்ஜியம், ஆஸ்திரிய மற்றும் சுவிஸ் குடிமக்கள் உட்பட 30 வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த 250 பேருடன் இந்த விமானம் சீனாவின் வுஹான் நகரில் இருந்து புறப்பட்டது.

பயணிகள் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும்,

அவர்கள் அடுத்த 14 நாட்களை பிரெஞ்சு விமானத் தளமான Istres-Le-Tubé-ல் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் இந்த குடிமக்களை தன்னிச்சையாக திருப்பி அனுப்புவதற்கு பிரெஞ்சு மற்றும் சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றியதாகக் கூறியது.

முன்னதாக 10 சுவிஸ் குடிமக்கள் திரும்புவார்கள் என கருதப்பட்டது. ஆனால் புறப்படுவதற்கு சில மணித் துளிகள் முன்னர், இருவர் வுஹானில் தங்குவதாக தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் விமான பயணத்தின் போதும் பாதுகாப்பு கருதி முகமூடிகளை அணிந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் குடிமக்கள் பிரான்சில் இருந்து எப்போது திரும்புவார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்