சுவிட்சர்லாந்து, ஜேர்மனி போன்ற இந்த 10 நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை அபாயம்! வெளியான பட்டியல்: எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜெர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை எழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது.

தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாலும், உயிரிழப்பு அந்தளவிற்கு இல்லாத காரணத்தின் காரணமாகவும், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த 10 நாடுகளில், கரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவும் அடங்கும். இதுதவிர, ஈரான், ஜேர்மனி, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது கரோனா அலை வீசும் அபாயம் உள்ளது.

இதுதவிர, உக்ரைன், வங்கதேசம், பிரான்ஸ், ஸ்வீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிக தீவிரத்துடன் அமல்படுத்தப்படுவதில்லை.

இதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. இது, அந்த நோயின் இரண்டாவது பரவலுக்கு வித்திடும்.

கொரோனாவுக்கு எதிரான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வரும் சில நாடுகளில் கூட, அந்த நோய் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை உச்ச அளவை அடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்தது.

இந்தச் சூழலிலும், பொருளாதாரச் சரிவை சரிக்கட்டுவதற்காக வா்த்தக மையங்களை மீண்டும் திறக்க உலக நாடுகள் பல முனைந்து வருகின்றன.

இதுவும், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மூலகாரணமாக அமையும்.

ஜேர்மனியில் கட்டுப்பாடுகளைத் தளா்த்திய பிறகு ஜேர்மனியில் பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஆனால், சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பிறகு, அந்த நோயின் இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வார கொரோனா நிலவர ஒப்பீடு
ஜேர்மனி

பாதிப்பு 193,281

36.7%

உக்ரைன்

பாதிப்பு 40,008

29.3%

அமெரிக்கா

24,64,551

சுவிட்சா்லாந்து

31,428

வங்கதேசம்

1,26,606

பிரான்ஸ்

1, 61,348

ஸ்வீடன்

62,324

ஈரான்

215,096

இந்தோனேசியா

50,187

கடந்த வாரத்தைவிட 2.3% அதிகம்

சவூதி அரேபியா

170,639

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்