சுவிஸ் ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்: முக்கிய அடையாளத்தை வெளியிட்டு உதவி கோரிய பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
314Shares

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டல அவசர சேவை பிரிவினர் துன் ஏரியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

பெர்ன் மண்டல காவல்துறையினர் இச்சம்பவத்தைப் படுகொலை என்று கருதி, இறந்தவரின் அடையாளத்தைத் தேடுகின்றனர்.

ஞாயிறு மதியம் துன் ஏரியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பெர்ன் மண்டல பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணியளவில் துன் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொதுமக்களில் ஒருவரிடம் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர சேவை பிரிவினர், துரிதமாக செயல்பட்டு சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் தெரிய வராத நிலையில், அவரது மரணம் குறித்து விசாரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண்ணுக்கு 20 முதல் 40 வயதிருக்கும் எனவும், லண்டன் இசைக்கலைஞர் ஒருவரின் பெயரை அவர் பச்சைகுத்தியுள்ளதாகவும், அத்துடன் ஆந்தை ஒன்றின் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த தகவலை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பெர்ன் மண்டல பொலிசார் கோரியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்