கூகுளுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்க நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
163Shares
163Shares
lankasrimarket.com

சம காலத்தில் VR தொழில்நுட்பம் எனப்படும் மாயத்தோற்றத்தை தரும் தொழில்நுட்பம் மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் புதிய ப்ரொஜெக்ட் ஒன்றினை உருவாக்கி வருகின்றது.

இதில் செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்ற உணர்வை தரக்கூடிய வசதியும் உள்ளடக்கப்படவுள்ளது.

எனவே எதிர்காலத்தில் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் செவ்வாய் கிரகத்திற்கு பயணித்த அனுபவத்தினை இத் தொழில்நுட்பத்தின் ஊடாக பெற முடியும்.

கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு முப்பரிமாண முறையில் காட்சிகள் உள்ளடக்கப்படவுள்ளன.

இதேவேளை செவ்வாய் கிரகத்தின் முப்பரிமாண வீடியோவை வெளியிட்டுள்ள நாசா நிறுவனம் 2030ம் ஆண்டளவில் VR தொழில்நுட்பத்தின் ஊடாக அனைவருக்கும் செவ்வாய் கிரகத்தினை பார்த்து ரசிக்கும் வரப்பிரசாதத்தினை வழங்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்