உதவிக்கரம் நீட்டிய பிரித்தானியருக்கு சிறை விதித்த டுபாய்: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in பிரித்தானியா
222Shares
222Shares
Seylon Bank Promotion

ஐக்கிய அமீரத்தின் டுபாயில் பிரித்தானியர் ஒருவர் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி சிறை தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியரான Jamie Harron(27) பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டாதாக கூறி எழுந்த புகாரை அடுத்து டுபாய் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி பிரித்தானிய இளைஞர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை 3 ஆண்டுகளாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சட்ட ஆலோசனை மற்றும் இதர செலவினங்களாக குறித்த இளைஞர் 32,000 பவுண்டு தொகை வரை செலவிட்டுள்ளதாகவும் டுபாய் அரசு அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த யூன் மாதம் 2 நாள் விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள Jamie Harron அங்குள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது தங்களுக்கான மதுக் கிண்ணங்களுடன் இருக்கைக்கு திரும்பும் போது எதிரே மதுக் கிண்ணங்களுடன் நபர் ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அவர் தடுமாறி விழவிருந்த நிலையில் Jamie Harron அவரது இடையில் கை வைத்து தடுத்துள்ளார். இது அநாகரீகமான செயல் என புகார் எழுந்துள்ளதை அடுத்து டுபாய் பொலிசார் வழக்கு பதிந்து குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே 8 பேர் கொண்ட கும்பலுடன் டுபாய் சிறையில் Jamie Harron 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது பிணையில் வெளிவந்திருந்தும் தமது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளதால் பிரித்தானியா திரும்ப முடியாமல் தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய காலத்தில் பணிக்கு திரும்பாததை அடுத்து இவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் வேலையில் இருந்தும் விடுவித்துள்ளது.

தற்போது பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இவரை வழக்கில் இருந்து விடுவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்