இளவரசர் ஹரியின் திருமணம்: வர்த்தகத்தில் மெர்க்கல் ஏற்படுத்தவுள்ள தாக்கம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
431Shares
431Shares
ibctamil.com

இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கலின் திருமணத்திற்கான கடைசி கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் இந்த திருமணம் வேறு ஒரு புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகிய மேர்க்கல் பிரித்தானிய இளவரசரான ஹரியை திருமணம் செய்வது ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களுக்கு வர்த்தக உலகில் வாய்ப்புகளை அதிகரிப்பது உட்பட பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Project Diane என்னும் ஆய்வின் முடிவு ஒன்று தொழில் துவங்குவதற்காக வெள்ளையர்களான வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியைவிட கருப்பினப் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி மிக மிகக் குறைவாக இருந்ததாக தெரிவிக்கிறது.

2012 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 10,238 நிதி உதவிகளில் கருப்பினப் பெண்கள் பெற்றது வெறும் 24 மட்டுமே, அதாவது வெறும் 0.2 சதவிகிதம். அதுமட்டுமின்றி அவர்களுக்கு வெறும் 36,000 டொலர்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் வெள்ளையின ஆண்களுக்கு 1.3 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது.

கலப்பின பெண்ணாகிய மெர்க்கல், பக்கா வெள்ளையினத்தவர்களாகிய பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது, தொழில் துறையில் காணப்படும் கருப்பு வெள்ளை பாரபட்ச பிரச்சினையை சரிப்படுத்தும் ஒரு பெரிய விடயமாக அமெரிக்கர்களால், முக்கியமாக ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களால் பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் ஆடை வியாபாரம் செய்யும் புரூக்ளின் வர்த்தகரான Camille Newman, ”அது மெர்க்கலின் இனமோ, நிறமோ, வகுப்போ வயதோ அல்ல. அவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதுகூட இல்லை, அது ஒரு பெண்ணைக் குறித்த விடயம்” என்கிறார்.

“அவரால் அனைத்துப் பெண்களுக்கும் பெருமை” என்கிறார் அவர். பிரித்தானியர்கள் மீது அதிக பற்று கொண்ட அமெரிக்கர்கள் குறித்து ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளவரான Maya Jasanoff, பிரித்தானிய ராஜ குடும்பத்தின்மீது அமெரிக்கர்கள் வைத்திருக்கும் ஆர்வம் ஒருவகையில் பைத்தியக்காரத்தனமானது. அதுவும் அமெரிக்கரல்லாத ஒருவரைக் குறித்த விடயமென்றல் சொல்லவே வேண்டாம் என்கிறார்.

இதை நிரூபிப்பதுபோல் மெர்க்கல் திருமணம் செய்து கொள்ளும் நாளன்று அவர் படித்த அமெரிக்க பள்ளியின் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதைக் கொண்டாட இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்