இளவரசர் ஹரி - மேகன் திருமணத்தில் பிஷப் பேசியதால் பிரித்தானியாவில் என்ன நடந்துள்ளது தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசர் ஹரி - மேகன் திருமணத்தில் பிரசங்கித்த பிஷப் Michael Curryயின் செய்தி ராஜ குடும்பத்தையே அதிரச் செய்தது, மணமக்கள் உட்பட. அவரது 14 நிமிட பிரசங்கம் இணையத்தைக் கலக்கியதோடு அவரது சபை தலைமையிடமிருந்தும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

மணமகன் மணமகள் மற்றும் ராஜ குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் Michael Curry பிரசங்கத்தைக் கேட்டு சில நேரங்களில் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

அவர் எளிமையாக கூறிய “இரண்டு இளம் வயதினர் காதலில் விழுந்தார்கள், அதனால் நாமனைவரும் இங்கு கூடியுள்ளோம்” என்ற வாசகம் அடுத்த நாள் அனைத்து பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியானது. முக்கியமான விடயம் என்னவென்றால், இதனால் பிரித்தானிய திருச்சபைகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இனி போதகர்கள் தங்கள் சொந்த ஸ்டைலில் ஆராதனை நடத்தலாம் என சபைச் சட்டம் அனுமதி அளிக்கவுள்ளது. அடுத்த மாதம் அது சபைச் சட்டமாக ஆக்கப்பட உள்ளது.

இளவரசர் ஹரியையும் மேகனையும் என் சகோதரனே, என் சகோதரியே என்று அழைத்த Michael Curry, கடவுள் உங்களை நேசிக்கிறார், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று கூறியதோடு, அன்பின் சக்தியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்..அப்படி நாம் கண்டுபிடிக்கும்போது நாம் உலகையே புதிய உலகாக மாற்ற முடியும் என்றும் கூறும்போது மணமக்களும் நாணத்தில் நெளிந்தனர்.

Michael Curry தனது பிரசங்கத்தில் மார்ட்டின் லூதர் கிங்கையும் மேற்கோள் காட்டியது பலரையும் கவர்ந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்