கணவர் போன்று இருக்க விரும்பாத பிரித்தானிய மகாராணி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய மகாராணி கடுமையான முழங்கால் வலி மற்றும் பல் வலியால் அவதிப்பட்டு வருகின்ற போதும் பணிநிமித்தம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துள்ளார்.

இருக்கையில் அமர்ந்தால் பிரித்தானிய மகாராணியால் எழுந்திருக்க முடியாது. மேலும், பல்வலி காரணமாகவும் அவ்வப்போது இவரால் பேச இயலவில்லை.

இந்நிலையில், இருமலால் அவதிப்பட்டு வரும் இவர் தற்போது 10 நாட்களுக்கு ஓய்வில் இருக்கிறார். இருப்பினும், முழங்கால் வலி இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், தனது பணிக்கு திரும்பலாம் என கூறியபோது, தனது அரச பணிகள் தொடர்பான அட்டவணையில் பணி அதிகமாக இருக்கும் காரணத்தால், அதனை முடித்தபின்னரே அறுவை சிகிச்சை செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில் அவளது கண்களில் இருந்து கண்புரை அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக கண்ணாடியை அணிந்திருக்கிறார்.

மகாராணி அவர்களின் தந்தை George VI அவர்கள் புற்றுநோய் பாதிப்பால் தான் இறந்துபோனார். பொதுவாக அரச குடும்பத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டே பலரும் இறந்துபோயினர்.

தற்போது மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப்க்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக தனது அரச பணியில் இருந்து ஓய்வில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வரிசையில் இணைவதற்கு பிரித்தானிய மகாராணிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers