பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
717Shares
717Shares
ibctamil.com

பிரித்தானியாவின் Hartlepool பகுதியில் பரபரப்பான சாலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்மணி குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று இரவு சுமார் 9 மணியளவில் Hartlepool பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் பெண்மணி ஒருவர் மீட்க்கப்பட்டார்.

ஆனால் பலத்தகாயம் காரணமாக அவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்மணி 3 பிள்ளைகளுக்கு தாயார் எனவும், அவருக்கு 29 வயது எனவும், பெயர் கெல்லி பிராங்க்ளின் எனவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மட்டுமின்றி இந்த படுகொலை தொடர்பாக கிளவ்லேண்ட் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும்,

ஒரு ஆண் மற்றும் பெண் என இருவரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொல்லப்பட்ட கெல்லியின் குடும்பத்தினருடன் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரவாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொலை நடைபெற்ற ஆக்ஸ்போர்டு சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படும் எனவும், பெரும்பாலும் பேருந்து மற்றும் டாக்ஸிகள் மட்டுமே அவ்வழியாக சென்று வரும் எனவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக எவரேனும் வீடியோ பதிவு செய்திருந்தால் அதை பொலிசாருக்கு தந்துதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்