ஓடும் ரயிலில் சபலத்தால் சிக்கின கோடீஸ்வரர்: கூறிய விளக்கம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியக் கோடீஸ்வரர் ஒருவர் சபலத்தால் ரயிலில் தனக்கு முன் நின்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டு கையும் களவுமாக சிக்கிய சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

அரசு ஆலோசகராகவும் தேசிய லொட்டரி கமிஷனராகவும் பதவி வகித்தவரான James Froomberg (62), ரயிலில் பயணிக்கும்போது தனக்கு முன் நின்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ரயிலில் உடன் பயணம் செய்த ஒருவர் கண்டு சத்தமிட, அந்தப் பெண்ணின் காதலன் அவரைப் பிடித்து பொலிசிடம் ஒப்படைத்தான்.

அந்தப் பெண் நீதிபதிகளிடம் தனக்கு பின்னால் யாரோ மிகவும் நெருக்கமாக நின்றதாகவும், தனது பின் பக்கங்களைத் தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருந்ததாகவும் கூட்டம் அதிகமாக இருந்தும் சற்று நகர முற்பட்டதாகவும் ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து தன்னைத் தொட்டுக் கொண்டே இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் தனது தனது பின் பக்கங்களை அழுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் Jamesஇன் வழக்கறிஞரோ தனது கட்சிக்காரர் மிக அதிகமாக குடித்திருந்ததாகவும், நிற்க இயலாமல் எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி தவறுதலாக அந்தப் பெண்ணின் பின்பக்கத்தைத் தொட்டு விட்டதாகவும் வாதாடினார்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, James பக்கம் தவறு இருப்பதாகவும், அந்த பெண்ணும் அவரது காதலரும் அன்று நடந்த விடயங்களை சரியாக நினைவு கூர்ந்ததாகவும், அப்படி நடந்திருந்தாலொழிய அந்தப் பெண் அவ்வாறு குற்றம் சாட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சிக்கிக் கொண்டபோது அவர் ஓடவும் முயற்சி செய்திருக்கிறார், அதனால் அவர் தவறு செய்திருக்கிறார் என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்தார். James தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers