அப்பா, மேகனின் கரம் பற்றி நடந்த கணம் என்னை பெருமைப்படுத்தியது: நெகிழும் பிரித்தானிய இளவரசர் ஹரி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மேகன் மெர்க்கலின் தந்தை, திருமண தினத்தன்று அவரது கரம் பற்றி நடக்கத் தவறியபோது இளவரசர் ஹரி தனது தந்தையான இளவரசர் சார்லஸிடம் உதவி கேட்க, சற்றும் தயங்காமல் உடனே அதற்கு அவர் சம்மதித்த பெருந்தன்மையை நினைவு கூறுகிறார் ஹரி.

இளவரசர் சார்லஸின் 70ஆவது பிறந்த நாளையொட்டி உருவாக்கப்படும் ஆவணப்படம் ஒன்றில் இந்த நெகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஹரி.

பல சர்ச்சைகளையும் ராஜ குடும்பத்திற்கு அசௌகரியமாக சூழலையும் உருவாக்கிய மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ் மெர்க்கல், தனது மகளின் திருமணத்தன்று அவரது கரம் பற்றி நடக்கும் கடமையில் தவற, தான் தன் தந்தையிடம் சென்று உதவி கோரியதாகவும், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருந்ததுபோலவே உடனடியாக, நிச்சயம் செய்கிறேன், மேகனுக்கு என்னென்ன தேவையோ அவ்வளவும் செய்கிறேன், உங்களுக்கு அதரவளிப்பதற்காகத்தான் நான் இருக்கிறேன் என்றாராம் இளவரசர் சார்லஸ்.

அது எங்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கு அப்பாவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறும் ஹரி, அவர் எங்கள் அப்பா, எங்களுக்காகத்தான் அவர் இருக்கிறார், அவர் அப்படிச் செய்ததற்காக நான் மிக்க நன்றியுடையவனாக இருக்கிறேன் என்கிறார்.

ஹரியின் திருமணத்தன்று, இளவரசர் சார்லஸ், மேகனின் கரம் பற்றி அழைத்துக் கொண்டு புனித ஜார்ஜ் தேவாலயத்திற்குள் கொண்டு சேர்த்ததும், இளவரசர் ஹரி தன் தந்தையை திரும்பிப் பார்த்து ’நன்றி அப்பா’ என்று கூறியதைப் பார்த்து பல மில்லியன் மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

இளவரசர் சார்லஸின் மனைவியாகிய கமீலா கூறும்போது, அந்த நிகழ்வு மனதைத் தொட்டது, பிறகு அதை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அது அன்பை வெளிப்படுத்தும் ஒரு அருமையான சம்பவமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers