215 கிலோவிலிருந்து 130 கிலோ எடையை குறைத்தது எப்படி? பிரித்தானியாவை சேர்ந்த 42 வயது நபர் சந்தித்த கஷ்டங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய 215 கிலோ எடையிலிருந்து தற்போது 130 எடை குறைத்து சாதித்து காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் Hampshire பகுதியைச் சேர்ந்தவர் Jon Vidler. 42 வயதான இவர் தன்னுடைய 215 கிலோ எடையிலிருந்து கடினமான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் இப்போது 130 கிலோ எடை குறைத்து 84 எடை அளவிற்கு குறைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னுடைய ஆரம்பகால கட்டத்தில் அளவிற்கு அதிகமாக உணவு எடுத்து கொள்வேன். உடல் எடை அதிகரித்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால் இதற்கு எடை குறைப்பதற்கு முயற்சிகள் என்னவென்று கேட்ட போது, சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை ஆபத்தானவனை என்று தெரியவந்தது.

இருப்பினும் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக உடல் நிலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் வெறும் 60 கிலோ எடையை மட்டுமே குறைத்துள்ளார். அது போன்ற நிலையில் தான் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய இடி விழுந்துள்ளது. இவருடைய தாய் அப்போது இறந்து போக மீண்டும் எடை அதிகரிக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து அவ்வப்போது உடல்நிலை வேறு சரியில்லாமல் போயுள்ளது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த இவர் 2015-ஆம் ஆண்டும் மீண்டும் தன் எடையை குறைப்பதற்கு சபதம் எடுத்துள்ளார்.

அதன் படி இவரின் நண்பர் உதவியுடன் Slimming World -ல் சேர்ந்த இவர் தன் உடல் எடையை மெல்ல மெல்ல குறைத்துள்ளார். எப்படி என்றால் தினந்தோறும் காலையில் நடைபயணம் மேற்கொள்வது, தானே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொள்வது என்று தன்னுடைய இலக்கை அடைய ஓடியுள்ளார்.

இவர் எடை குறைப்பதற்கு தந்தையும் மிக முக்கிய காரணமாக இருந்தார். முதலில் நாள் ஒன்றிற்கு 2.5 மைல் ஓடிய இவர் தற்போது 10 கி.மீற்றர் வரை ஓடுகிறார்.

மேலும் Jon Vidler தற்போது நான் என் எடையை குறைத்துவிட்டேன், ஆனால் என்னுடைய இந்த நிகழ்வுகளை பகிர்வதற்கு ஒரு ஆள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

எடை குறைப்பதற்கு முன்பு Jon Vidler சாப்பிட்ட உணவுகள்

சாக்லேட், சாண்ட்விச், சாலட், மைக்ரோவேவில் செய்யப்பட்ட உணவுகள், சிப்ஸ்கள் மற்றும் அவ்வப்போது ஏதேனும் ஒன்றை சாப்பிடுவது போன்று இருந்துள்ளார்.

எடை குறைத்த பின்பு அவர் சாப்பிடும் உணவுகள்

வேகவைத்த காளன் மற்றும் காய்கள் மதிய வேளையில் பாஸ்தா உணவுகள், இனிப்பு சேர்க்காத பழச்சாறு, பழங்கள் மற்றும் சின்ன சாக்லெட் பார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்