இளவரசி மேகனுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை... கேட் - வில்லியமின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி மேர்கனுக்கு குழந்தை பிறந்த நிலையில், கேட் மற்றும் வில்லியம் தம்பதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஹரி, அமெரிக்க முன்னாள் நடிகை மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு இந்த ஜோடி அரச குடும்ப பயணமாக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர்,

அதுமட்டுமின்றி மேகனைப் பற்றி சில சர்ச்சை செய்திகளும் வந்ததுண்டு.

இந்நிலையில் மேகன் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மேகனுக்கு என்ன குழந்தை பிறக்கும்? எப்போது பிறக்கும்? என்ற ஒரு விவாதமே சென்றிருக்கிறது.

இதையடுத்து இன்று காலை மேகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி அறிந்தவுடன் பிரித்தானியா மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மேகனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மேகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் ரியாக்சன் என்ன என்பதை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், மேகன் மற்றும் ஹரி எந்தளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ அதே அளவு மகிழ்ச்சியில் தான் நாங்கள் இருக்கிறோம். ஹரி மற்றும் மேகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த செய்தி மேகன் மற்றும் ஹரி இன்ஸ்டாகிராமில் பதிவுப் செய்யப்பட்டிருந்ததால், அதற்கு கேட் மற்றும் வில்லியம் லைக் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சமூகவலைத்தளமான டுவிட்ட பக்கத்தில் அரசகுடும்பத்திற்கான டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டிருந்ததால், இதையும் அவர்கள் ரீடுவிட் செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers