இளவரசியானபின் மேகன் எழுதிய முதல் மன்னிப்பு கடிதம்: சுவாரஸ்ய பின்னணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியை மணந்ததும் மிகவும் பிஸியாகிவிட்ட மேகன், முதல்முறையாக ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதியுள்ளார்.

மேகன் மெர்க்கல் கல்வி பயின்ற பள்ளியின் மாணவிகள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி சந்திக்கும் நிகழ்வு ஒன்று லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அனைத்து மகளிர் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.

மேகன் பிரசவத்தை எதிர்நோக்கி இருந்ததால் அவரால் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற இயலவில்லை.

அதனால் மேகன் தன்னால் மாணவர் கூடுகையில் கலந்து கொள்ள இயலாது என்று கூறி தனது வகுப்பு தோழியருக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கென்சிங்டன் அரண்மனையின் பெயர் குறிப்பிடப்பட்ட உறை ஒன்றில் வைத்து அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் தன்னால் மாணவர் கூடுகையில் கலந்து கொள்ள இயலாததற்கு மன்னிப்புக் கோரியிருந்தார் மேகன்.

கடிதம் அனுப்பிய அடுத்த நாள் குட்டி இளவரசர் ஆர்ச்சியை பெற்றெடுத்தார் மேகன்.

1999ஆம் ஆண்டு Immaculate Heart உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 50 மாணவிகளில் 37 பெண்கள் அந்த மாணவர் கூடுகையின் 20ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்கள்.

மேகனை சந்திக்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் அனைவருக்கும் இருந்தது.

ஆனால் முதல் பிரித்தானிய அமெரிக்க இளவரசிக்கு பிறந்த முதல் பிரித்தானிய அமெரிக்க இளவரசரைக் குறித்தே அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் மேகன் அனுப்பிய கடிதம் வாசிக்கப்பட அந்த இடத்தின் சூழலே மாறிப்போனது.

ஒரு இளவரசியாக ஆன பின்னரும் மேகன் தங்களை நினைவில் வைத்து மன்னிப்புக் கடிதம் அனுப்பியதை எண்ணி மெய் சிலிர்த்துப் போனார்கள் அவரது தோழியர்.

எப்படியும் தங்கள் மாணவர் கூடுகையின் 25ஆவது ஆண்டு விழாவிலாவது மேகன், குட்டி இளவரசர் ஆர்ச்சியுடன் கலந்து கொள்வார் என தாங்கள் நம்புவதாக மேகனின் தோழியர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers