அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா.. ஈரானுக்கு எச்சரிக்கை விடுப்பு

Report Print Basu in பிரித்தானியா

அமெரிக்கா-ஈரான் இடையே வார்த்தை மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஈரானுக்கு, பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவை தூண்டிவிடாதீர்கள், டிரம்ப் பதிலடி கொடுப்பார் என ஈரானுக்கு பிரித்தானியா வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெர்மி ஹன்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமெரிக்க நலன்கள் தாக்கப்படுமானால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கும்.

அமெரிக்காவின் தீர்மானத்தை குறைத்து எடை போட வேண்டாம் என ஈரானியர்களுக்கு நான் கூறுகிறேன். ஈரானுடனான போரை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அமெரிக்க நலன்கள் தாக்கப்பட்டால், அவர்கள் பதிலடி கொடுப்பார்கள். ஈரானியர்கள் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டிய ஒன்று இதுதான் என பிரித்தானியா வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்