வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த தாய்-தந்தை: சடலங்களுக்கு நடுவே அழுதுகொண்டிருந்த குழந்தை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் மர்மமாக வீட்டில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Staffordshire பகுதியில் உள்ள வீட்டில் நேற்று மாலை கிரில் நெம்ட்சேவ் (32) மற்றும் லானா நெம்ட்சேவா (23) என்கிற தம்பதியினர் சுயநினைவில்லாமல் இருப்பதாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தம்பதியினர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும், 2 வயது குழந்தை மட்டும் எந்தவித காயமும் இல்லாமல் வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து கூறியுள்ள பொலிஸார், தம்பதியினர் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பு குறித்து தெரியவரும். மீட்கப்பட்ட குழந்தை தற்போது தம்பதியினரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில், எஸ்டேட் முகவர்கள் வழியாக தான் தம்பதியினர் என்னை அணுகினார்கள். அவர்களுடன் ஒரு ஆணும் அந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றிருந்தார். அந்த ஆண் யார் என்பது எனக்கு தெரியாது. அவர் ஒரு குடும்ப உறுப்பினரை போல இருந்தார். வாடகைக்கான செலவுகளை ஈடுகட்ட அவர்களுக்கு இடையேயான ஒரு ஏற்பாடு இது என்று நான் கருதினேன்.

வீட்டிற்கு வந்த சமயத்தில் அந்த பெண் கர்ப்பிணியாக இருந்தார். அதன்பிறகே அவருக்கு குழந்தை பிறந்தது.

நான் அவர்களுடன் எந்த பிரச்சினையும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்கள் வாடகையை சரியான நேரத்தில் செலுத்தினர் என தெரிவித்துள்ளார்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...