உலகமே ஸ்தம்பித்துவிட்டது... இரு மகன்களை சாலையில் பறிக்கொடுத்த பிரித்தானிய தாயாரின் கண்ணீர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தமது இரு மகன்களை பறிக்கொடுத்த இந்த்கிய வம்சாவளி பிரித்தானிய தாயார் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

பிரித்தானியாவின் வோல்வெர்ஹாம்டன் பகுதியில் கணவருடன் குடியிருக்கும் 43 வயது ஆரதி நேஹர் என்பவரே தமது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த சாலை விபத்து தொடர்பில் தற்போது மனம் திறந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை தமது பிள்ளைகள் சஞ்சய்(10), மற்றும் பவன்வீர்( 23 மாதங்கள்) ஆகியோருடன் ஆரதி நேஹர் மீன் உணவு சாப்பிட தங்களது வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போதே அசுர வேகத்தில் இன்னொரு வாகனத்தை துரத்தி வந்த கார் ஒன்று இவர்களது வாகனத்துடன் பலமாக மோதியுள்ளது.

இதில் சம்பவயிடத்திலேயே இரு பிள்ளைகளும் மரணமடைய, ஆரதி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவமனையில் வைத்தே தமது பிள்ளைகள் இருவர் மரணமடைந்த தகவல் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பிரித்தானிய காவல்துறையிடம் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், வழக்கை அவர்கள் உரிய முறையில் விசாரிப்பார்கள் என நம்புவதாக ஆரதியின் கணவர் ஜஸ்விந்தர் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அந்த கொடூர சம்பவத்திற்கு பின்னர் தமது உலகமே ஸ்தம்பித்துள்ளதாக கூறும் ஆரதி, அப்போது காயமடைந்த தமது முதுகெலும்புடன் போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

அந்த விபத்துக்கு பின்னர் பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்பியதாக கூறும் ஆரதியின் உறவினர், ஆனால் தற்போதும் அதுபோன்ற கார் பந்தயத்தால் பல விபத்துகள் நடதேறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்