லண்டன் விமான நிலையம் முற்றுகை... பல மணி நேரம் தாமதமான விமானம்: வெளியான வீடியோ

Report Print Arbin Arbin in பிரித்தானியா
720Shares

லண்டனில் புறப்பட தயாராக இருந்த விமானம் ஒன்றில் திடீரென்று நுழைந்த காலநிலை மாற்ற ஆர்வலர்களால் குறித்த விமானம் சில மணி நேரம் தாமதமாக புறப்படு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று நான்காவது நாளாக Extinction Rebellion எனப்படும் காலநிலை மாற்ற ஆர்வலர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று திடீரென்று லண்டன் நகர விமான நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், புறப்பட தயாராக இருந்த விமானம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

இதனால் அந்த விமானத்தின் உள்ளே சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிசார் விமானத்திற்கு உள்ளே புகுந்து குறித்த ஆர்வலர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் விமான நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்வலர்கள் பலரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் சரசரவென விமானத்தின் மீது ஏற முற்பட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்வலர்களை பொலிசார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

லண்டன் நகர விமான நிலையம் முற்றுகை போராட்ட வேளையில் சுமார் 60 விமானங்கள் வந்து சென்றுள்ளன.

காலை வரை குறித்த நேரத்தில் வந்து சென்ற விமானங்கள் பலவும், விமான நிலைய முற்றுகையை அடுத்து சில மணி நேர தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கும் Extinction Rebellion எனப்படும் காலநிலை மாற்ற ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் இதுவரை 850 பேர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்