பிரித்தானியாவுக்கு வருவதற்காக அந்தர் பல்டி அடித்த ஷமீமா பேகம்: கதையையே மாற்றிவிட்டார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனிலிருந்து ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவுக்கு ஓடிய மாணவியான ஷமீமா பேகம், எப்படியாவது பிரித்தானியாவுக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக புதுக்கதை ஒன்றுடன் களமிறங்கியிருக்கிறார்.

தான் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட நபர் என புது வழக்கு ஒன்றை தொடர இருக்கிறார் ஷமீமா.

15 வயதில் பிரித்தானியாவை விட்டு ஓடிப்போன ஷமீமா, அவரது பிரித்தானிய குடியுரிமை பறிக்கப்பட வேண்டுமா என்பது குறித்த ஒரு விசாரணையில் பங்கேற்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

தற்போது 19 வயதாகும் ஷமீமாவின் சட்டத்தரணியான Tasnime Akunjee, இந்த வாரம் ஒரு முதற்கட்ட விசாரணை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிரியா சென்றடைந்த ஷமீமா, அங்கு ஐ.எஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் 23 வயது Yago Riedijkஐ மணந்தார்.

இப்போது, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட ஒரு நபராக, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக முன்னிறுத்துகிறார் ஷமீமா.

தான் ஐ. எஸ் அமைப்பைச் சேர்ந்த Yago Riedijkஆல் 15 வயது சிறுமியாக இருக்கும்போது வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாக வாதிட இருக்கிறார் அவர்.

அதே நேரத்தில், அவர் இல்லாமல் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட முடியாது என அவரது சட்டத்தரணிகள் வாதிட இருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்புதான், பிரித்தானிய உள்துறைச்செயலரான பிரீத்தி படேல் ஐ.எஸ் அமைப்பினர் ஒருவரின் மனைவியான ஷமீமா, பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்று கூறியிருந்தார்.

குழந்தைகளை பறிகொடுத்து மன நலம் பாதிக்கப்பட்டிருக்கும் தனக்கு மன நல ஆலோசனை தேவைப்படுவதாகவும், அது சிரியாவில் கிடைக்காது என்றும் கூறி, எப்படியாவது தன்னை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்குமாறு கெஞ்சியிருந்தார் ஷமீமா.

அதற்கு பதிலளித்த படேல், முடியவே முடியாது என்றார்.

நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பது நமது கடமை, நமது நாட்டுக்கு பாதகம் செய்து தீவிரவாதக் குழு ஒன்றில் இணைவதற்காக நாட்டை விட்டு ஓடிய ஒருவர் நமக்கு தேவையில்லை என்றார் படேல்.

நம் நாட்டுக்குள் நுழைந்து, நமக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய யாரையும் நம் நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது, இந்த பெண் (ஷமீமா பேகம்) உட்பட, என்றார் பிரீத்தி படேல்.

இப்போது, தான் எப்படியாவது பிரித்தானியாவுக்கு வர விரும்புகிறேன் என்று கூறினாலும், தான் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக வருத்தப்படவில்லை என்று கூறியிருந்த ஷமீமா, வெட்டப்பட்ட முதல் தலை தரையில் உருளுவதை நான் பார்த்தபோது, அது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என முன்பொருமுறை பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்