கொரோனா பயங்கரம்... பிரித்தானியாவில் இவர்களுக்கு சிகிச்சை இல்லை: கைவிரித்த NHS

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலவீனமானவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என NHS கைவிரித்துள்ளது.

உலகில் 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 83,387 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ள நிலையில், சுமார் 2,859 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

தற்போதைய சூழலில், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தாக்கம் மெதுவாக குறைந்துவருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும்,

வேகமாக பரவி வருவதாகவும் வெளியாகும் தகவல்கள், உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரித்தானியாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 என அதிகரித்துள்ளது.

ஆனால் நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நீடிப்பதால், பலவீனமானவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், அவர்களை மரணத்திற்கு கையளிப்பதை தவிர வேறு வழியில்லை என NHS நிர்வாகம் கைவிரித்துள்ளது.

மேலும் பிழைப்பார்கள் என்று உறுதியாக தெரியவரும் நோயாளிகளுக்கு மட்டும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் NHS நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நாடு முழுவதும் hand gel உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பெருமளவில் வாங்கிக் குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...