லண்டனில் டாக்சி ஓட்டுனர் மீது எச்சில் துப்பிய பயணி! சில வாரங்களில் கொரோனா தாக்கி உயிரிழந்த பரிதாபம்.. முழு தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் டாக்சி ஓட்டுனர் மீது பயணி எச்சில் துப்பிய சில வாரத்தில் ஓட்டுனர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் அவரின் நண்பர் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளார்.

கிழக்கு லண்டனை சேர்ந்த டாக்சி ஓட்டுனர் Trevor Belle (61). இவர் கடந்த மாதம் 18ஆம் திகதி கொரோனா வைரஸ் பாதிப்பால் ராயல் லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது குறித்து Trevor-ன் நெருங்கிய நண்பர் Damian Briggs கூறுகையில், Trevor உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவரின் டாக்சியில் ஒரு பயணி ஏறியுள்ளார்.

ஆனால் அந்த பயணி தனது பயண கட்டணமான £9-ஐ கொடுக்க மறுத்ததால் அவருக்கும் Trevor-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது Trevor மீது அந்த பயணி எச்சில் துப்பிவிட்டு, எனக்கு கொரோனா வைரஸ் உள்ளது, இப்போது உனக்கும் அந்த தொற்று உள்ளது என கூறினார்.

இதன் பின்னர் சில வாரங்களில் Trevor-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா அறிகுறியும் தென்பட்டது.

இதையடுத்தே மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு தொடர் சிகிச்சையளித்தும் பலனில்லாமல் Trevor உயிரிழந்தார்.

நானும் அவனும் இரத்தம் சொந்த இல்லை என்றாலும், சகோதரர்கள் போல தான் இருந்தோம்.

அவர் எல்லோரிடமும் அன்பாக பழகுவதோடு, மற்றவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பார்.

அதாவது எவ்வளவு மோசமான மனநிலையில் இருந்தாலும் Trevor அவர்களை சிரிக்க வைத்து விடுவார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்