லண்டன் நகரில் மீண்டும் ஊரடங்கு? எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக உறுதியான தகவல் கிடைக்கும் பட்சத்தில் லண்டன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என மாட் ஹான்காக் எச்சரித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தலைநகரில் அதுபோன்ற ஒரு சூழலை செயல்படுத்த தயக்கமில்லை என்றார் அவர்.

சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாடுகளை லண்டன் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார் ஹான்காக்.

கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து வட மேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய ஹான்காக், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார்.

லெய்செஸ்டரில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அது உண்மைதான் என்பதையும் நிரூபித்துள்ளது என்றார்.

மட்டுமின்றி, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பகுதிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட நடவடிக்கைகளை கொரோனா பரவல் தொடர்பில் முன்னெடுத்து வருகிறோம் என்றார் ஹான்காக்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்