பிரித்தானியாவை துவம்சம் செய்த பிரான்சிஸ் புயல்: ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1271Shares

விடிய விடிய வீசிய பிரான்சிஸ் புயலால் பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும், மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசியதில் வேல்ஸ் அல்லோலகல்லோலப்பட்டுவிட்டது.

மின்தடை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Gwyneddஇல் பெருவெள்ளம் காரணமாக சுமார் 40 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்