பிரித்தானியாவில் ஒரு வாரத்திற்கு இத்தனை பேர் கொரோனாவால் பலியா? எச்சரிக்கை: அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்

Report Print Santhan in பிரித்தானியா
1609Shares

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு வார இடைவெளியில் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், பலியின் எண்ணிக்கை 70,000-ஐ எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் கொரோனாவின் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை, ஒவ்வொரு வாரமும் உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த ஒரு வார இடைவெளியில் கொரோனா வைரஸ் காரணமாக 3000 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகீறது.

இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70,000-ஐ தொட்டுள்ளது. இதுவே ஒரு வாரத்திற்கு முன்பு 67,000 ஆக இருந்தது.

(Image: Andrew Teebay/Liverpool Echo)

மொத்தம் இறப்பு பதிவுகள் பற்றிய சமீபத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் dashboard-ல் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

புள்ளிவிவரங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளதன் படி கொரோனா காரணமாக 1,227 இறப்புகள் வடக்கு அயர்லாந்தில் கடந்த 13-ஆம் திகதி வரை 1,227 இறப்புகள் பதிவாகியுள்ளது.

இந்த வார துவக்கத்தில், ஸ்காட்லாந்தின் தேசிய பதிவுகளால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் படி கொரோனாவால் சம்பந்தப்பட்ட 5,135 இறப்புகள் பதிவாகியுள்ளது.

தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நவம்பர் 6 வரை மொத்தம் 59,549 கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவை நவம்பர் 14 வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தத்தில், இந்த புள்ளிவிவரங்கள் படி பிரித்தானியாவில் இதுவரை 65,911 இறப்பு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டதிலிருந்து, மேலும் 4,343 மரணங்கள் பிரித்தானியாவில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது,

இங்கிலாந்தில், நவம்பர் 7 முதல் 19 வரை 3,957 பேரும், வேல்ஸில் 262 பேரும் கொரோனா சம்பந்தமாக உயிரிழந்துள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் நவம்பர் 14 முதல் 19 வரை 66 பேரும், ஸ்காட்லாந்தில் நவம்பர் 16 முதல் 19 வரை 58 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இவை எல்லாம் வைத்து மொத்தமாக சேர்த்து பார்க்கும் போது, கொரோனா சம்பந்தமாக 70,254 மரணங்கள் இதுவரை பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ளது.

ஆனால், அதே சமயம் கொரோனாவுக்கு சாதகமாக சோதனை செய்து 28 நாட்களுக்குள் இறந்தவர்களை மட்டுமே கணக்கிடும் அரசின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையில் பலி 54,286 ஆக உள்ளது.

கொரோனா தீவிரம் இன்னும் பிரித்தானியாவில் குறையாத காரணத்தினால், மக்கள் சற்று கவனமுடனும், பாதுகாப்புடனும் இருப்பது அவசியம் என்று எச்சரிக்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்