பிரெக்சிட் எதிரொலி! கடல் எல்லையில் குவிந்த பிரித்தானியா போர் கப்பல்கள்: பிரான்ஸ்-க்கு எச்சரிக்கை?

Report Print Basu in பிரித்தானியா
690Shares

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிறகு பிரான்ஸ் உடனான கடல் எல்லை பகுதியில் பிரித்தானியா போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ள சம்பவம் சற்று பதற்றத்தை அதிகரித்துள்ளது.

புத்தாண்டு மாலை பிரக்சிட் ஒப்பந்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே பிரித்தானியா HMS Mersey, Severn, Trent, Tamar, மற்றும் Tyne ஆகிய ஐந்து போர்கப்பல்களை இங்கிலாந்தை பிரான்சிலிருந்து பிரிக்கும் கடல் பகுதியான இங்கிலீஷ் சேனலுக்கு அனுப்பியுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பணிகளின் ஒரு பகுதியாக வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள போர்க்கப்பல்கள் Portsmouth-ல் இருந்து புறப்பட்டதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் மீன்பிடிப் பகுதியைப் பாதுகாப்பதற்காக போர்கப்பல்கள் இங்கிலீஷ் சேனலுக்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் வெளிநாட்டுக் கப்பல்களுடன் மோதலில் ஈடுபட முயற்சிக்கவில்லை. இவை எங்கள் கடல் பகுதி என்று நாங்கள் சிக்னல் செய்கிறோம், அவற்றைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் பொறுப்பு என ராயல் கடற்படையின் முன்னாள் தலைவரான Admiral Lord Alan West சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்